வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா அவர்களின் வழிப்படுத்தலில் வசதியற்ற வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள தரம் ஜந்து மாணவர்களுக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்குகள் சமூக அறிவுச் செயற்பாடுகளில் ஒன்றான அறிவுச் சங்கமம் தரவட்டக் குழுவினரின் ஒருங்கிணைப்பாளர் வ.ஆதவன் (கிராம உத்தியோகத்தர்) அவர்களினால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.
கடந்த மாதம் ஆரம்பமான இச் செயற்றிட்டம் ஈச்சம்குளம் பகுதியில் 118 மாணவர்களும், ஆசிகுளம் பகுதியில் 196 மாணவர்களும் ஓமந்தை பகுதியில் 68 மாணவர்களும் பங்குபற்றியிருந்தனர்.
ஒவ்வொரு பகுதிகளிலுமுள்ள தரம் ஐந்து மாணவர்களின் விபரங்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு இச் செயற்றிட்டம் இடம்பெற்று வருவதாக மேலும் தெரிவித்தார்.
புலமைச்சுடர் பிரதான வளவாளர் எஸ்.கபிலன், மற்றும் கிராம உத்தியோகத்தர் ப.உமாபதி, பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.