ஒரு இதயத்துடன் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு!!

621

Twin Babies

ஒரே இதயம் மற்றும் ஒரே கல்லீரலுடன் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்தன.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மராட்டிய மாநிலம் லாத்தூர் மாவட்டம் சாஸ்தூர் பகுதியை சேர்ந்த தஸ்லீன் மசூல்தர் என்ற பெண் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அறுவை சிகிச்சை மூலம் கடந்த சனிக்கிழமை இரவு இவருக்கு, உடல் ஒட்டியபடி இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகள் ஒட்டிப்பிறந்த போதிலும், இரு குழந்தைகளுக்கும் தனித்தனி தலைகள், தலா 2 கைகள், கால்கள் இருந்தன.

ஆனால் விசித்திரமாக அக்குழந்தைகளுக்கு இதயமும், கல்லீரலும் ஒன்றாகவே இருந்தன. ஒட்டிப்பிறந்த இரட்டையர்களை நவீன மருத்துவ தொழில்நுட்பத்துடன் பிரிக்கும் முயற்சிக்காக மும்பை சயான் மாநகராட்சி மருத்துவமனைக்கு வைத்தியர்கள் அம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.

ஆனால் அம்புலன்ஸ் புனே வந்து கொண்டிருந்தபோது, ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளின் இதயதுடிப்பு நின்றது.

பிறப்பால் இணைபிரியாத அக்குழந்தைகளின் உயிரும் ஒன்றாகவே பிரிந்தது. மருத்துவ துறையினருக்கு இந்த இரட்டையர்கள் சவாலாக இருந்தபோதிலும், உயிரிழப்பு சோகமாக அமைந்து விட்டது.