பிரதான போதை பொருள் வர்த்தகர்கள் கைது: தொடரும் அதிரடி விசாரணை!

546

arrest (1)
போதை வியாபாரத்தில் முக்கியமானவர்கள் என்று கருதப்படும் மூவர் கொழும்பில் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களை கைது செய்த போது இவர்களிடம் இருந்து ஒரு கோடி பெறுமதியான ஹெரோயினைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த சந்தேகநபர்களை தற்சமயம் போதை பொருள் விற்பனையின் பிரதான சூத்திரதாரியாக கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் வெலே சுதா மற்றும்,தர்மராஜா சுசேந்திரன் ஆகிய இருவரும் இயக்கி வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் புதிய பொலிஸ்மா அதிபரான பூஜித் ஜயசுந்தரவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதைப் பொருள் வியாபாரத்தினை ஒழிக்கும் நடவடிக்கைக்கு கீழ் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் போதை பொருள் பாவனையை இந்த நாட்டில் இருந்து முற்றாக ஒழிக்கும் நடவடிக்கையின் கீழ் குறித்த சுற்றிவளைப்பானது வெற்றி பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.