வவுனியாவில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு பிராந்திய தூதுவர் அலுவலகம் அமைக்கத் திட்டம்!!

577

foreign-ministry-sri-lanka

வவுனியா மாவட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தனது பிராந்திய தூதுவர் அலுவலகத்தை அமைக்க எண்ணியுள்ளது.

அதற்கான கட்டிடம் வவுனியா நகரில் தேவைப்படுவதாக வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா அறிவித்துள்ளார்.

இதன் மூலம் கொழும்பை மையமாகக் கொண்ட சேவைகள் பிராந்திய ரீதியாக பரவலாக்கப்பட்டு வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்படி அலுவலகத்தை ஆரம்பிப்பதற்கான ஆகக் குறைந்த தகமைகளைக் கொண்ட கட்டடங்கள் வாடகைக்கு அல்லது குத்தகைக்கு கோரப்படுகின்றன.

ஆர்வமுடைய உரிமையாளர்கள் எதிர்வரும் 30.06.2016 க்கு முன்னதாக வவுனியா பிரதேச செயலாளரிடம் தமது விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க முடியும் என்றும் மேலதிக தகவல்களை வவுனியா பிரதேச செயலகத்தில் பெறமுடியும் என்று மேலும் தெரிவிக்கப்படுகின்றது.