கர்நாடகாவில் நர்சிங் கல்லூரி மாணவியை பினாயிலை குடிக்க வைத்து சீனியர் மாணவிகள் ராகிங்கில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தஅஸ்வதி என்ற மாணவி, ஐந்து மாதங்களுக்கு முன்னர்தான் கர்நாடக மாநிலம் குல்பர்காவில்உள்ள அல் குமர் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பில் சேர்ந்துள்ளார்.கடந்த மே மாதம் 9-திகதி ராகிங்கில் ஈடுபட்ட அக்கல்லூரியின் சீனியர் மாணவிகள், அஸ்வதியை கழிவறையை சுத்தம் செய்யும் திரவத்தை குடிக்க வைத்துள்ளனர்.
இந்த கொடூரத்தில் ஈடுபட்ட சீனியர் மாணவிகளும் கேரளாவை சேர்ந்தவர்கள் எனவும்தெரிய வந்துள்ளது.இந்த சம்பவம் நடந்த ஐந்து நாட்களுக்கு பின்னர் கடுமையான வயிற்று வலியால்அவதிப்பட்ட அஸ்வதி, சிகிச்சைக்காக கேரள மாநிலம் கோழிக்கோடில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.அங்கு அவர் 5 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்றுள்ளார்.
டக்டர்கள் அளித்துள்ள தகவலில், கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை குடித்ததால், அவரின் உணவுக்குழாய் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் அஸ்வதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டுள்ள அஸ்வதி அளித்துள்ள வாக்கு மூலத்தில், வங்கியில் கடன் வாங்கி குறித்த படிப்பில் சேர்ந்ததாகவும்,கல்லூரியில் சேர்ந்த நாள் முதல், கடந்த ஐந்து மாதங்களாக தான் ராகிங் கொடுமையை அனுபவித்து வந்ததாக தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து கோழிக்கோடு பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.