இந்தோனேசியாவில் நிர்க்கதியான நிலையில் தங்கியுள்ள 44 இலங்கை அகதிகளும் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டால் அவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்கள் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளதாக த காடியன் தெரிவித்துள்ளது.
இதன் நிமித்தம் த காடியனால் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பல இலங்கையர்கள் நேர்காணல் செய்யப்பட்டனர்.
2010 ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வந்து தற்போது அவுஸ்திரேலிய பிரஜையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஒருவரின் கருத்துப்படி, இந்தோனேசியாவில் உள்ள இந்த அகதிகள் மீண்டும் இந்தியாவுக்கோ அல்லது இலங்கைக்கோ திருப்பியனுப்பப்பட்டால் அவர்கள் சித்திரவதை செய்யப்படுவார்கள் அல்லது அவர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த 44 அகதிகளின் படகு இந்தியாவில் இருந்து புறப்பட்ட பின்னர் தமக்கு செய்மதி தொலைபேசி மூலம் அந்த செய்தி தெரிவிக்கப்பட்டதாக கூறும் கரிகாலன் எனினும் அடுத்து வந்த 10 நாட்களில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த அகதிகளை அடையாளம் காணும் பணிகள் முடிந்த பின்னர் அவர்களை இலங்கைக்கு திருப்பியனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அச்சே பிராந்திய குடிவரவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.







