அதிக பாவணையாளர்களால் உபயோகிக்கப்படும் வீடியோ தளமான யூட்யூப் நேற்று தீடீரென செயலிழந்தது. செயலிழந்த யூட்யூப் தளம் மீண்டும் 15 நிமிடங்களுக்கு பின்னரே இயல்பு நிலைக்கு திரும்பியது.
செயலிழந்த யூட்யூப் தளத்தில் “மிகவும் பயிற்சி பெற்ற குழுவொன்று இந்த நிலைமையை சமாளிக்க அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நீங்கள் அவர்களை கண்டால் இதனை தெரியப்படுத்துங்கள் ” என்ற வாசகம் காட்சிபடுத்தப்பட்டிருந்தது