
கொழும்பிலிருந்து பதுளை வரைவில் விமான சேவை ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பண்டாரவளையில் உள்நாட்டு விமான நிலையமொன்றை அமைக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து பதுளைக்கு தரை மார்க்கமாக பயணிக்க 6 மணித்தியாலயங்கள் செலவாகின்றன. இந்த தூரத்தை வான் மார்க்கமாக 25 நிமிடங்களில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வான் போக்குவரத்து மூலம் சுற்றுலாத்துறையையும் விருத்தி செய்து கொள்ளலாம். இதனால் பதுளை மாவட்டத்தில் உள்நாட்டு விமான நிலையம் ஒன்றினை அமைப்பது மிகவும் பயன்மிக்கதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.





