பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் காரை வழிமறித்த மர்ம பெண்!!

259

Shahrukh-Khan

மும்பையில் பொலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் பயணித்து வந்த காரை ஒரு மர்ம பெண் வழிமறித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சம்பவத்தின் போது அங்கு இருந்தவர்கள் குறித்த காட்சியை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

ஷாருக்கான், சமீபத்தில் ரூபாய் 2.78 கோடி மதிப்புள்ள BMW i8 காரை குர்கானில் வாங்கியதாக கூறப்படுகிறது, எனினும் குறித்த கார் கடந்த வாரம் மும்பை பாந்தராவில் உள்ள அவரது வீட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.ஷாருக்கான் புதிய காரில் பாந்தராவை சுற்றி வீடு திரும்பும் போதே குறித்த சம்பவம் நடந்துள்ளது, ஷாருக்கான் வீட்டிற்கு அருகில் ஒரு மர்ம பெண் அவரது கார் முன் வந்து நின்று வாகனத்தை நிறுத்துமாறு கேட்டுள்ளார்.

மிதமான வேகத்தில் வந்த கார் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் காரை ஷாருக்கான் ஓட்டினாரா, ஒட்டுநர் ஒட்டினாரா என்பது தெளிவாக இல்லை, பிறகு காரின் ஜன்னல் அருகே சென்ற பெண்ணை அங்கிருந்த மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.இதனையடுத்து, ஷாருக்கானின் கார் சென்றுள்ளது. குறித்த பெண் வீடில்லாத ஒரு பெண் எனவும், உதவி கேட்கவே காரை நிறுத்தியாக கூறப்படுகிறது.