தேவாலயத்தில் திடீர் தீவிபத்து: புனித நீரால் தீயை அணைத்த தம்பதிக்கு குவியும் பாராட்டு!!

284

625.0.560.320.500.400.194.800.668.160.90

சுவிட்சர்லாந்து நாட்டில் கிறித்துவ தேவாலயம் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து புனித நீரை கொண்டு தீயை விரைவாக அணைத்த தம்பதிக்கு பொலிசார் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.சுவிஸின் St Gallen நகரில் வரலாற்று சிறப்பு வாய்ந்த கிறித்துவ தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தேவாலயத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் வேளையில் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா தம்பதி இருவர் சென்றுள்ளனர்.

அப்போது, தேவாலயத்தில் பாவ மன்னிப்பு வழங்கும் இடத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்டிருந்த மெழுகுவர்த்தியால் இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.தீ ஜுவாலைகள் வேகமாக பரவியதை தொடர்ந்து, பெரும் சேதாரம் ஏற்பட்டுள்ளது. இதனை அந்த சுற்றுலா தம்பதி பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தீயை விரைவாக அனைக்க எண்ணிய அவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த புனித நீரை எடுத்து சென்று தீ மீது ஊற்றியுள்ளனர். இதனால் தீ உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டது.எனினும், இந்த விபத்தில் ஆயிரக்கணக்கான பிராங்க் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பொலிசார், விரைந்து செயல்பட்ட அந்த தம்பதியை பாராட்டியுள்ளனர்.மேலும், இந்த தீவிபத்து திட்டமிட்டு நடத்தப்பட வாய்ப்புள்ளது என்பதால், இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.