பதினைந்து வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிரசவம்!!

518

Baby

நாவலப்பிட்டிய பிரதேசத்தில் முழுமையான விபரங்கள் தெரியாத இளைஞன் ஒருவன் மூலமாக பதினைந்து வயது யுவதியொருவர் ஆண் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். இச்சம்பவம் நேற்று நாவலப்பிட்டிய , இங்குரு ஓயா பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

குறித்த சிறுமி வயிற்று வலி காரணமாக அவரது தகப்பனாரால் நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளதுடன் , நேற்றைய தினம் ஆண்குழந்தை ஒன்றையும் பிரசவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமி சில மாதங்களுக்கு முன்னர் கண்டியில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றிய சந்தர்ப்பத்தில் இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

எனினும் அந்த இளைஞனின் ஊர் பெயர் எதுவும் தெரியாத நிலையில், அவருடையை தொலைபேசி இலக்கம் மூலமாக இருவருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே சிறுமி சில மாதங்களுக்கு முன்னர் குறித்த தனியார் நிறுவன வேலையிலிருந்தும் விலகியுள்ளார்.

அதன் பின்னர் அவருடன் தொடர்பில் இருந்த இளைஞனுக்கும் அவருக்கும் இடையிலான தொடர்பும் கைவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பதினைந்து வயது சிறுமியை தாயாக்கிய குறித்த இளைஞன் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.