வவுனியா பூந்தோட்டம் வயல்வெளிக்கு அருகே காணப்படும் மதகிற்கு கிழே இன்று காலை சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
வவுனியா பூந்தோட்டம் வயல்வெளிக்கு அருகே காணப்படும் மதகிற்கு கீழே இன்று (24.06.2016) காலை உருக்குலைந்த சடலத்தினை கண்ட பொதுமக்கள் பூந்தோட்டம் வீதியில் காணப்படும் பொலிஸ் காவலரனுக்கு சென்று முறையிட்டனர்.
இச் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வவுனியா பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
குறித்த சடலம் திருநாவற்குளத்தினைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான பாக்கியம் ஜஸ்ரின் ( 48வயது) என அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த நபரை மூன்று தினங்களாக காணவில்லை என அவரது உறவினர்களினால் நேற்றைய தினம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு அருகே துவிச்சக்கரவண்டி காணப்படுவதால் விபத்தா? கொலையா? என பொலிஸார் விசனம் தெரிவிக்கின்றனர்.






















