
திண்டிவனத்தில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள நெய்குப்பி கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பநாதன். இவருடைய மகள் ஆனந்தி அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று வழக்கம் போல் பள்ளி சென்ற மாணவி ஆனந்தி பள்ளியில் இருந்து திடீரென காணாமல் போய்விட்டதாக பள்ளி நிர்வாகம் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளது.மாணவியை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், ஆனந்தி கழுத்தறுபட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.
தற்போது மேல் சிகிச்சைக்காக திண்டிவனத்தில் இருந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆனந்தி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.பள்ளி மாணவி ஒருவர் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





