திருநங்கையை திருமணம் செய்து குடும்பம் நடத்திய இளைஞன்!!

1023

2_2040058h
கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில், இளைஞர் ஒருவர் பெற்றோருக்கு தெரியாமல் திருநங்கையை திருமணம் செய்து அவருடன் குடும்பம் நடத்தி வந்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் Gadigeratanda பகுதியைச் சேரந்த சிவக்குமார்(வயது-20) என்ற இளைஞன் தனது பெற்றொருக்கு தெரியாமல் ராதிகா என்னும் 19 வயதான திருநங்கையை திருமணம் செய்துள்ளார்.

சம்பவத்தை தொடர்ந்து சிவக்குமாரின் உறவினர்களுக்கும், திருநங்கை சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையே வாய்மொழி சண்டை நடந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து சிவக்குமாரின் மூத்த சகோதரர் Fakirappa கூறியதாவது, திருநங்கை தனது சகோதரன் சிவக்குமாரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பொலிஸ் அதிகாரி ஒருவர் அளித்துள்ள தகவலில், சிவக்குமார், திருநங்கை சமூகத்தினர் வாழும் Benki நகரில் உள்ள வீட்டில் கண்டெடுக்கப்பட்டார், பின்னர், அவரின் சம்மதத்துடன் பெற்றொருடன் அனுப்பிவைக்கப்பட்டார்.இதுபோன்ற சம்பவங்கள் குறித்து வழக்கு பதிவு செய்ய சட்டம் கிடையாது, குறித்து பிரச்சனையை சட்ட ஆலோசனை படி சுமூகமாக தீர்த்து வைத்ததாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.