கணவர் மிக வசீகரமானவராக இருப்பதால் விவாகரத்துக் கோரும் பெண்

659

Angry couple mad at each other

எகிப்தை சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவர் அதிக வசீகரமாக இருப்பதாகக் காரணம் கூறி விவாகரத்து கோரியுள்ளார். இப் பெண்ணுக்கு 3 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. அவரின் கணவர் ஒரு மருத்துவராவார். ஆனால், அண்மையில் தனது கணவரிடமிருந்து விவாகரத்துக் கோரி இப் பெண் நீதிமன்றத்தை நாடினார்.

தனது கணவர் மிக கம்பீரமானவராக, வசீகரமானவராக இருப்பதால் அவரை தான் நம்பவில்லை என அப் பெண் தெரிவித்துள்ளார். தனது கணவரை எந்நேரமும் வேறு பெண்கள் பார்ப்பதாகவும் வேறு பெண்களுடன் அவருக்குத் தொடர்புகள் இருக்கக்கூடும் என தான் அஞ்சுவதாகவும் அப் பெண் தெரிவித்துள்ளார். இதனால், தான் துயரமான ஒரு வாழ்க்கையே வாழ்வதாகக் கூறி, தனக்கு விவாகரத்து வழங்குமாறு அப் பெண் கோரியுள்ளார்.