மறுதேர்தல் நடத்த 15 லட்சம் பிரிட்டன் மக்கள் வலியுறுத்தல்!!

609

PD*62806472

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது குறித்து பிரிட்டனில் பொது வாக்கெடுப்பு நடந்தது. அதில் விலக வேண்டும் என்று 51.9 சதவீதம் பேர் அதிகப்படியாக வாக்களித்தனர். 48.1 சதவீதம் பேர் விலக வேண்டாம் என்று வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது உறுதியாகி விட்டது.

இந்நிலையில் பிரிட்டன் பாராளுமன்ற இணையதளத்தில் வில்லியம் ஆலிவர் ஹீலே என்பவர் ஒரு மனுவை பதிவேற்றினார்.

அந்த மனுவில் வாக்குப்பதிவானது 75 சதவீதத்திற்கு குறைவாகவும், விலகுவது அல்லது இணைந்திருப்பது என்பதற்கான வாக்கு சதவீதம் 60 சதவீதத்திற்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.