சம்பூரின் இயற்கை வாயு மின்சார நிலைய அமைப்புக்கு சர்வதேச ஏலம்!!

724

auction-pritchards-cabinet-of-curiosities

சம்பூரில் அமைக்கப்படவுள்ள இயற்கை எரிவாயு மின்சார உற்பத்தி நிலைய அமைப்பு தொடர்பில் சர்வதேச ஏல முறைக்கு செல்ல அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இதன்படி கேள்விப்பத்திரம் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதியன்று விளம்பரப்படுத்தப்படவுள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சின் செயலாளர் பி எம் எஸ் பட்டகொட தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை அரசாங்கத்தின் இந்த திட்டத்துக்கு கொள்கை ரீதியான ஆதரவை வழங்க இந்தியா இணங்கியுள்ளது. எனினும் ஜப்பானிய அரசாங்கம் இன்னும் தமது பதிலை வெளியிடவில்லை. இதேவேளை சர்வதேச ஏலத்துக்கு செல்லும் முன்னர் அரசாங்கம் சுற்றாடல் தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தவேண்டும் என்று எரிசக்தி தொடர்பான நிபுணர் திலக் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.