காதல் விவகாரம் : யுவதியைக் கொன்று தற்கொலைக்கு முற்பட்டவர் கைது!!

723

Dead body

அம்பாறை – கொண்டுவடவான ஆற்றுக்கு அருகில் பெண் ஒருவர் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று(26.06) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சந்தேகநபர் விஷம் அருந்தி தானும் தற்கொலை செய்ய முற்பட்டுள்ளதாக, அம்பாறை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காதல் விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடே சம்பவத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
மேலும் கொலையான பெண் 30 வயதான ஒருவராவார்.

சந்தேகநபர் அம்பாறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.