
போதைப் பொருள் குற்றச்செயல்கள் தொடர்பில் கடந்த ஆண்டு 67000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் 35 வீதமானவர்கள் ஹெரோயின் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் எனவும், ஏனைய 65 வீதமானவர்களில் பெரும்பான்மையானவர்கள் கஞ்சா போதைப் பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள் குற்றச் செயல்கள் தொடர்பில் கைதானவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மேல் மாகாணத்தில் 61 வீதமானவர்களும், தென் மாகாணத்தில் 10 வீதமானவர்களும் ஊவா மாகாணத்தில் 4 வீதமானவர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் மொத்த சனத்தொகை விகிதாசார அடிப்படையில் நோக்கினால் ஒரு லட்சம் பேரில் 329 பேர் போதைப் பொருள் குற்றச் செயல்களின் அடிப்படையில் கைது செய்யப்ப்பட்டுள்ளனர்.போதைப் பொருள் குற்றச் செயல்களின் அடிப்படையில் வெளிநாட்டுப் பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் ஆபத்தான ஒளடதங்கள் தொடர்பான திணைக்களம் ஆகியன நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.





