இன்று காலை 8 மணிமுதல் தினச்சந்தை வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ள உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தினர் தமது 35 வியாபார நிலையங்களை மூடி இவ் உண்ணாவிரதப் போரட்டத்தில் இணைந்து கொண்டனர்.
வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் தாண்டிக்குளத்தில் அமையவேண்டும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது என்று உண்ணாவிரதத்திலிருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை ஆரம்பமான தொடர் உண்ணாவிரதம், இன்று முடிவு ஏதும் எட்டப்படாவிட்டால் தொடர்ந்து நாளையும் தொடரவுள்ளதாகவும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.
இன்றைய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன், கே.கே.மஸ்தான் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் ஜெயதிலக, சிறிரேலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா, வன்னி மாவட்ட ஜக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர், மற்றும் சங்க உறுப்பினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.




























