பேஸ்புக்கில் ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் வெளியானதால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வினுப்பிரியா என்ற இளம்பெண், மர்ம நபர்கள் சிலர் தன்னுடைய புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளதாக கூறி கடந்த 23ம் திகதி காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
இந்த புகார் குறித்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இன்று வினுப்பிரியா தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
காவல்துறையினரிடம் புகார் அளித்தும் வினுப்பிரியாவின் மற்றொரு ஆபாசப்படம் பேஸ்புக்கில் நேற்று வெளியாகியுள்ளது. இதனை கண்ட வினுப்பிரியா அவமானத்தால் மனமுடைந்து தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.
வினுப்பிரியாவின் புகாரை காவல்துறையினர் சரியாக விசாரிக்காததே அவரின் மரணத்திற்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ள வினுப்பிரியாவின் உறவினர்கள், குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே உடலை பெறுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவரது தந்தை, 10 நாட்களுக்கு முன்பே வினுப்பிரியாவின் பேஸ்புக் பக்கத்தை முடக்க கூறினோம். ஆனால் அவர் இறந்த பிறகு பேஸ்புக் பக்கத்தை முடக்கி உள்ளனர் என கூறியுள்ளார்.






