வெங்கலச் செட்டிகுளம் சந்திக்கு அருகாமையில் நாளை மறுதினம் (30.06.2016) காலை 9.00 மணிக்கு சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திறந்துவைக்கப்பட உள்ளது.
இச்சிலை திறப்புவிழாவிற்கு இந்துமத அலுவல்கள் மற்றும் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற, சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்கள் வருகை தரவுள்ளார்.
இவ் ஏற்பாட்டினை வெங்கலச் செட்டிகுளம் இந்து கலாச்சார பேரவை ஒழுங்கு செய்துள்ளது. இதனை முன்னிட்டு இப்பகுதியில் நேற்று சிரமதானப் பணி நடைபெற்றது.
-சங்கீதன்-











