ஒக்டோபர் மாத ராசி பலன்கள் – விருச்சிகம்!!

344

viruchikam

ஆன்மிக சிந்தனை மிக்கவர்களாக இருக்கும் நீங்கள், துணிச்சலாக எதையும் செய்வீர்கள். இந்த மாதத்தின் தொடக்கத்தில் வீண் செலவுகள் காரியத் தடையை தந்தாலும் மாதத்தின் பிற்பகுதியில் இந்த நிலை மாறும். செல்வச் சேர்க்கையும் எதிலும் வெற்றியும் கிடைக்கும். ராசியாதிபதி செவ்வாயின் சஞ்சாரத்தால் எதிலும் வேகம் காட்டுவீர்கள்.

உத்யோக நிமித்தமாக இடமாற்றம் ஏற்படும். சற்று எச்சரிக்கையுடன் எதையும் செய்வது நன்மையைத் தரும். ஆனால், குருவின் தன ஸ்தான பார்வையால் தொழில், வியாபாரத்தில் முழு கவனத்துடன் ஈடுபடுவீர்கள். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.

அடுத்தவர்களுக்காக விட்டுக் கொடுத்துச் செல்வீர்கள். தற்போது சனியின் சஞ்சாரம் ராசிக்கு 12ல் இருப்பதால் உத்யோகத்தில் சில பிரச்னைகளை சந்திக்க வேண்டியது இருக்கும். தற்போது உங்கள் ராசிக்கு 12ல் சஞ்சரிக்கும் ராகுவும், 6ல் சஞ்சரிக்கும் கேதுவும் பல நன்மைகளை தருவார்கள்.

சகோதர வழியில் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். மற்றவர்கள் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது நல்லது. அக்டோபர் 17ம் திகதிக்கு பிறகு திடீரென்று அடிக்கடி கோபம் வந்துபோகும். யாரையும் எடுத்தெறிந்து பேசாமல் இருப்பது நல்லது. குறிப்பாக வியாபாரத்தில் ஈடுபட்டிருப்போர் வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நன்மையை தரும்.

பெண்களுக்கு இந்த மாதம் சில நற்பலன்களை தந்தாலும் மனகஷ்டமும் அவ்வப்போது வந்து நீங்கும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது. மாணவர்கள் விளையாட்டு போட்டிகளின் போதும் வாகனத்தில் செல்லும்போதும் கவனமாக இருப்பது நல்லது. கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு கவனம் தேவை. கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் உண்டாகலாம். கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

பரிகாரம் : துர்க்கை அம்மனை செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பூஜை செய்து வழிபட எதிர்ப்புகள் நீங்கும். தைரியம் கூடும். பணவரத்து திருப்தி தரும்.

சந்திராஷ்டமம் : 25, 26 திகதிகளில் இரவு நேரப் பயணத்தின்போது உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம் : “ஓம் ஸ்ரீஅங்காரகாய நமஹ” என்ற மந்திரத்தை 9 முறை சொல்லவும்.

சிறப்பு பரிகாரம் : முருகன் கோயிலில் உள்ள நாகருக்கு நெய் தீபம் ஏற்றவும். வேலுக்கு பாலபிஷேகம் செய்வதும் நன்மையைத் தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : ஞாயிறு, புதன், வியாழன்.
தேய்பிறை : திங்கள், வியாழன்.
.