வெளிநாட்டு பெண்கள் குட்டைப் பாவாடை அணியக் கூடாது!!

431

Toursit

இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டுப் பெண்கள் இனிமேல் குட்டைப் பாவாடை அணியக் கூடாது என்று மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சரான மகேஷ் சர்மா வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான 1363 என்ற உதவி எண் சேவையை அறிமுகம் செய்து வைத்தார்.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிநாட்டு சுற்றுலா பெண்கள் விமான நிலையத்தில் வந்து இறங்கும் போது, எவற்றை எல்லாம் செய்யலாம், எவற்றை எல்லாம் செய்யக் கூடாது என்ற கட்டுப்பாட்டை விளக்கும் வகையில் வரவேற்பு பதாகைகளிலே அவற்றை குறிப்பிட வேண்டும்.

அவர்கள் செல்லும் வாகனத்தின் நம்பர் பலகையை புகைப்படம் எடுத்து நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் அனுப்பி வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்த வேண்டும்.

குறிப்பாக அவர்கள் சிறிய நகரங்களுக்கு வந்தால், இரவில் தனியாக வெளியில் சுற்றி திரியக் கூடாது, ஸ்கர்ட் போன்ற குட்டை பாவாடைகளை அணியக் கூடாது என தெரிவித்துள்ளார்.