ரோபோவை திருமணம் செய்ய நீதிமன்றத்தின் அனுமதி கோரும் பெண்!!

496

இயந்திர மனிதனை திருமணம் செய்துக்கொள்ள அனுமதி கோரி பிரான்ஸ் பெண்ணொருவர் அந்நாட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

லிலீ என்ற இந்த பெண், கடந்த ஒரு வருடமாக தான் இயந்திர மனிதனுடன் காதல் கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

இன்மவுட்டர் என்ற இந்த இயந்திர மனிதன் பாலியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திர மனிதனுக்கு சாதாரண மனிதனின் உணர்வுகளை அறிந்து கொள்ள முடியும் என்பதுடன் அதற்கு பதிலளிக்கவும் முடியும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், தனக்கும் இயந்திர மனிதனுக்கும் இடையில் உள்ள காதல் வேறு எவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதால், அதனை சட்டரீதியாக மாற்றும் அனுமதியை நீதிமன்றம் வழங்க வேண்டும் என லிலீ குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை கடந்த வாரம் லண்டனில் நடைபெற்ற இயந்திர மனிதன் தொடர்பான மாநாடு ஒன்றில் உரையாற்றிய பேராசிரியர் டேவிட் லெவி, 2050 ஆம் ஆண்டில் மனிதனும் இயந்திர மனிதனும் தம்பதிகளாக இருப்பார்கள் எனக் கூறியிருந்தார்.

அவர் கூறிய இந்த எதிர்வுகூறலை பிரான்ஸ் நாட்டு பெண் உண்மையாக்கியுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் இந்த நிலைமை அதிகரித்தால், எதிர்காலத்தில் மனிதர்களுக்கு இடையிலான தொடர்புகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.