05 வயது முதியவர் 1 மணி நேரத்தில் 22.5 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி உலக சாதனை!!

277

 
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 105 வயது முதியவர், 1 மணி நேரத்தில் 22.5 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டிக் கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.

ராபர்ட் மர்ச்சான்ட் எனும் குறித்த முதியவர் தனது 40 ஆவது வயது முதலே சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டுள்ளார். அன்றிலிருந்து சைக்கிளோட்டத்தில் பல சாதனைகளைப் படைத்து வருகிறார்.

இவர் தனது 102 ஆவது வயதில் 1 மணி நேரத்தில் 26.9 கிலோமீட்டர் தூரத்தை சைக்கிளோட்டிக் கடந்தார்.

100 ஆவது வயதில் 4 மணி 27 நிமிடத்தில் 100 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார். இதற்காக 6 மாதங்கள் பிரத்தியேக பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

தொடர்ந்து சாதனைகள் படைத்து, சாதனைக்கு வயது முக்கியமில்லை என்பதை நிரூபித்து வருகிறார்.