பெண்­க­ளுக்கு மாத்­தி­ர­மான விமானம் : பாலியல் தொந்த­ர­வு­களை தவிர்ப்­ப­தற்­காக எயார் இந்தியா அறி­முகம்!!

325

பெண்­க­ளுக்கு மாத்­திரம் ஒதுக்­கப்­பட்ட விமான ஆச­னங்­களை பெண் பய­ணி­க­ளுக்கு வழங்க எயார் இண்­டியா நிறு­வனம் முன்­வந்­துள்­ளது.

விமானப் பய­ணங்­களின்போது பெண்கள் பலர் பாலியல் தொந்­த­ர­வு­களை எதிர்­கொண்­ட­தாக செய்­யப்­பட்ட முறைப்­பா­டு­க­ளை­ய­டுத்து இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக அந்­ நி­று­வனம் தெரி­வித்­துள்­ளது.

தனி­யாகப் பயணம் செய்யும் பய­ணி­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த எயார் இண்­டியா நிறு­வனம் விரும்­பு­கி­றது என அந்­நி­று­வ­னத்தின் பொது முகா­மை­யா­ளர்­களில் ஒரு­வ­ரான மீனாக் ஷி மாலிக் தெரி­வித்­துள்ளார்.

“இந்­தி­யாவின் தேசிய விமான சேவை என்ற வகையில், பெண் பய­ணி­களின் சௌக­ரி­யத்தை மேம்­ப­டுத்­து­வது எமது பொறுப்பு என நாம் கரு­து­கிறோம்” என அவர் தெரி­வித்­துள்ளார்.

இந்­தி­யா­வுக்குள் சேவையில் ஈடு­படும் எயார்பஸ் ஏ 320 ரகத்தைச் சேர்ந்த தனது விமா­னங்­களில் இவ்­வார இறு­தி­யி­லி­ருந்து இத்­ திட்டம் அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக எயார் இண்­டியா நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

இத் ­திட்­டத்­தின்­படி, விமா­னங்­களின் சிக்­கன வகுப்புப் பிரிவில் முன்­வ­ரி­சை­யி­லுள்ள 6 ஆச­னங்கள் பெண்­க­ளுக்­காக மாத்­திரம் ஒதுக்­கப்­பட்­டி­ருக்கும்.

தனி­யாகப் பயணம் செய்யும் பெண்கள் இந்த ஆச­னங்­களைக் கோர லாம். இதற்­காக மேல­திக கட்­டணம் எதுவும் அற­வி­டப்­படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில மாதங்களில் தனது ஏனைய விமானங்களிலும் இத் திட்டம் அமுல்படுத்தப்படும் என எயார் இண்டியா நிறுவனம் தெரிவித்துள்ளது.