ஒலியின் வேகத்தை ஒத்த ரயில் : தென்கொரியா முன்னெடுக்கவுள்ள புரட்சிகர திட்டம்!!

310

உலகில் தற்போது பாவனையில் உள்ள அதிக வேகமுடைய ரயிலை விட இருமடங்கு வேகமுடைய ரயிலை அறிமுகப்படுத்துவதற்கு தென்கொரிய தொழிநுட்பவியலாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ஒலியின் வேகத்தை ஒத்த ரயில் பயணத்தை உருவாக்குவதற்கு தென் கொரியா முயற்ச்சித்து வருகின்றது. இது மணித்தியாலயத்திற்கு சுமார் 620 மைல் வேகத்தில் செல்லக்கூடியதாக இருக்கும் என அந்நாட்டு ரயில்வே பாதைகள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தாழ் அழுத்த குழாய்கள் மூலம் இயக்கப்படவுள்ள குறித்த ரயிலானது, மின்காந்த திறன் சக்தியில் இயங்கும் ரயிலின் வேகத்தை விட ( மணித்தியாலயத்திற்கு 268 மைல் தூரம்) இரண்டு மடங்கு வேகமுடையதாகும்.

குறித்த திட்டத்தின் மூலம் கொரியாவிற்குள் அதிவேக ரயில் பயணத்தை ஏற்படுத்த கொரிய ரயில்வே அபிவிருத்தி மையம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் சுமார் 100 பில்லியன் டொலர்கள் செலவில் மணித்தியாலயத்திற்கு 1200 கிலோமீற்றர்கள் செல்லும் ஹைபெர்லூப் ( hyperloop) ரயில்களை உருவாக்கும் பணிகளும் திட்டமிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.