அதிக ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழவேண்டுமா : இதைச் செய்யுங்கள்!!

599

உலகில் வாழும் எல்லா மனிதர்களுக்கும் தாங்கள் அதிக நாட்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கும். சில எளிதான விடயங்களை அன்றாட வாழ்க்கையில் மேற்கொண்டால் இது நிச்சயம் சாத்தியமாகும்.

உணவுகள்

இன்று பலருக்கு இதய நோய், சர்க்கரை நோய் போன்ற ஆபத்தான நோய்கள் வர காரணமே அவர்களின் தவறான உணவு பழக்கம் தான்.

கலோரிகள், கொழுப்புகள் அதிகம் கொண்ட உணவுகள் சாப்பிட கூடாது.

இறைச்சிகள், எண்ணெயில் பொரித்த உணவுகளை குறைந்த அளவில் உண்பது நலம்.

அதே சமயத்தில் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்றவற்றை சாப்பிடுதல் உடலுக்கு நன்மைகளை கொடுக்கும் மற்றும் ஆயுளை கூட்டும்.

உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி

உடல் எடையை சரியான அளவில் வைத்து கொள்ளவும், இரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், இதய நோய் போன்ற பல்வேறு நோய்கள் வராமல் தடுக்க உடற்பயிற்சியும், நடைபயிற்சியும் உதவுகிறது.

அது மட்டுமில்லாமல் உடற்பயிற்சியை தினமும் செய்தால் அந்த நாள் சுறுசுறுப்பாக நகரும்.

ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு அதிக நேரம் வேலை செய்யும் இந்த கணினி யுகத்தில் உடற்பயிற்சி செய்ய வேண்டியது ஆயுளை நீட்டிக்க உதவும்.

குடும்பத்தினர்/ நண்பர்களுடன் நேரம் செலவிடுவது

மன அழுத்தம் என்பது இன்று உலகில் பலருக்கும் இருக்கும் நோயாகி விட்டது.

இதிலிருந்து விடுபட நமது குடும்பத்தினர்கள் மற்றும் நமது மனதுக்கு நெருக்கமான நண்பர்களுடன் நேரம் செலவிட வேண்டியது அவசியமாகும்.

’வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்’ என்ற பழமொழிக்கேற்ப நமக்கு பிடித்தமானவர்களுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவழித்தாலே அது ஆயுளை கூட்டும்.

புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது

இந்த பாஸ்ட் புட் யுகத்தில் நல்ல உணவுகளை சாப்பிட்டாலே அது உடலுக்கு கேடு விளைவிக்கிறது.

கேடு விளைவிக்கும் என தெரிந்தே புகை பிடிப்பதையும், மது அருந்துவதையும் செய்தால் எப்படி?

ஆகவே, இந்த பழக்கங்களை விட்டுவிடுவது நன்மை பெயர்க்கும்.

பிடித்ததை செய்யுங்கள்

சிலருக்கு புத்தகம் படிக்க பிடிக்கும், சிலருக்கு கிரிக்கெட் விளையாடுவது பிடிக்கும்.

அது போல பலருக்கு பலவிதமான விடயங்களில் ஈடுபாடு இருக்கும். எப்போதும் வேலை என மனதை இறுக்கமாக வைத்து கொள்ளாமல் மனதுக்கு பிடித்த விடயங்களில் நம்மை ஈடுபடுத்தி கொள்வது மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியை கொடுத்து நம்மை இளமையாக வைக்க உதவும்.