வலையில் சிக்கிய இரட்டைத்தலை கடற்பன்றி!!

487

 
விலங்குகளில் கூடுதல் உறுப்புகள் ஒட்டி பிறப்பவை மிகவும் அரிதென கருதப்படுகிறது. இந்நிலையில், கடற்பன்றியொன்று இரட்டைத் தலையுடன் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கடற்பன்றிக்கு முழுமையாக வளர்ச்சியடைந்த இரண்டு தலைகள் உள்ளன.

திமிங்கிலத்திற்கும் டால்ஃபினுக்கும் உயிரியல் வகையில் தொடர்புடைய விலங்காக கடற்பன்றியைக் குறிப்பிடுகின்றனர்.

கடலோரத்திலும், கடலையொட்டிய நீர்நிலைகளிலும் இந்த உயிரினம் வாழ்கின்றது. இதற்கு முன்னால், இரண்டு காளை மாடுகள் ஓட்டி பிறந்ததுதான் விலங்கினங்கள் இணைந்து பிறந்த சம்பவமாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், பிறந்த சற்று நேரத்தில் அந்த இரட்டை உடலுடைய காளை மாடு இறந்து விட்டது. தற்போது, இந்த நீர்நிலை உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பற்றி ரோட்டர்டாமிலுள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் இருந்து சமீபத்தில் வெளியான ‘டெய்ன்ஸ்’ சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு மே மாதம் பிரிட்டனின் தெற்கிலுள்ள வடக்கு கடலில், மீனவர் குழு ஒன்று இந்த இரட்டை தலையுடைய கடற்பன்றியை நீரில் இருந்து வெளியே எடுத்தது.

இந்த உயிரினத்தை வைத்திருப்பது சட்டவிரோதம் என்று எண்ணிய அந்த மீனவர் குழு, மீண்டும் அதை தண்ணீரில் விட்டுவிட்டார்கள். ஆனால், அதற்கு முன்பாக அதன் புகைப்படத்தை பலரும் எடுத்துள்ளனர்.

திமிங்கிலம் மற்றும் டால்ஃபின் குடும்பம் முழுவதிலும், இவ்வாறு கூடுதல் உறுப்போடு பிறந்த நிகழ்வு இது 10 ஆவது முறையாகும்.

இவ்வாறான உயிரினங்களின் பிறப்புக்கு முன்னரும், பிறப்புக்கு பின்னருமான இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதால், எண்ணிக்கை தெளிவாகத் தெரியாமல் போகிறது.