வாடிக்கையாளருக்கு எச்ஐவி-யை பரப்பிய திருநங்கைக்கு ஏற்பட்ட நிலை!!

350

அவுஸ்திரேலியாவில் வாடிக்கையாளருக்கு எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்ஐவி கிருமியை பரப்பிய திருநங்கை பாலியல் தொழிலாளிக்கு ஆறு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பால்மர் (40) என்ற திருநங்கை பாலியல் தொழிலாளிக்கு எச்ஐவி வைரஸ் இருந்துள்ளது. இதை தனது 20 வயதான வாடிக்கையாளரிடம் கூறாத அவர் கடந்த 2014ல் அவருடன் பலமுறை உறவு வைத்து கொண்டுள்ளார். இதையடுத்து அந்த நபரையும் எச்ஐவி கிருமி தாக்கியுள்ளது.

இது குறித்து பெர்த் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் பால்மர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

தனக்கு எச்ஐவி நோய் உள்ளது என தனக்கே தெரியாது என பால்மர் கூறியும் அதை நீதிபதி ஏற்காத நிலையில் அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து பால்மருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அடுத்த சில ஆண்டுகள் பால்மர் சிறையில் கண்டிப்பாக இருந்தாக வேண்டும் என்ற நிலையில் 2021ல் தான் அவருக்கு பிணை கிடைக்கும்.

இது ஒரு மோசமான குற்றம் எனவும், பாதிக்கப்பட்டவரிடம் பால்மர் காட்டிய அலட்சியம் கண்டிக்கத்தக்கது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.