தலை முதல் கால்வரை பச்சைகுத்தியுள்ள வினோத மனிதன்!!

300

பிரித்தானியாவில் நபர் ஒருவர் தனது உடம்பு முழுவதும் பச்சை குத்தியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பிரித்தானியாவின் பிர்பிங்கம் நகரை சேர்ந்த மேதியோ வெலன்(34) என்ற நபர், பல லட்ச ரூபாய் செலவு செய்து தனது தலையில் இருந்து கால் வரை பச்சை குத்தியுள்ளார்.

இதுவரை 30,000 பவுண்ட்ஸ் செலவு செய்து பச்சை குத்தியுள்ள வெலன் தனது இடது கண் விழியிலும் பச்சை குத்தியது மட்டுமல்லாமல் தனது மார்பு பகுதியில் சிலிகாலான மனித மண்டையோட்டை சிகிச்சை செய்து பொருத்தியுள்ளார்.

சுமார் 3 மணி நேரம் செய்யப்பட்ட இந்த சிகிச்சைக்காக , மொத்தம் 350 பவுண்டுகளை அவர் செலவு செய்துள்ளார்.மேலும் தனது 16 வயதிலிருந்து பச்சைக்குத்தி வரும் வெலன் கடந்த 2011 ஆண்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பாராட்டும் பெற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் மற்ற மனிதர்களை விட வித்தியாசமாக இருக்க நினைக்கிறேன் என்றும் மக்களும் இதை விரும்புகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

T1 T2 T3