மலேசிய விமானம் எவ்வாறு விபத்துக்குள்ளானது : கறுப்புப்பெட்டி தகவல் மூலம் அம்பலம்!!

267

Flight

அண்மையில் கிழக்கு உக்ரேனில் 298 பேருடன் வீழ்ந்து நொறுங்கிய, மலேசிய விமானம் தொடர்பான புதிய தகவல் வெளியாகியுள்ளது. மலேசியன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானம், ஏவுகணைச் சன்னம் தாக்கியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏவுகணைச் சன்னம் தாக்கியதால் சடுதியாக காற்றழுத்தம் குறைந்து வெடித்துச் சிதறியதாக உக்ரேனிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானிய நிபுணர்களால் பகுப்பாய்வு செய்யப்படும் கறுப்புப் பெட்டிகளில் இருந்து இந்தத் தகவல்கள் அறியக் கிடைத்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

எவ்வாறேனும், ஏவுகணையை ஏவியது யார் என்பது தெரியவில்லை. இது தொடர்பில் ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளும், உக்ரேனிய அதிகாரிகளும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

298 பேருடன் நெதர்லாந்தில் இருந்து மலேசியா நோக்கிப் பயணித்த எம்.எச்.17 விமானம் உக்ரேனின் கிழக்கு பிரதேசத்தில் வீழ்ந்து நொருங்கியது. இதிலுள்ள அனைவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. இதனை கிளர்ச்சியாளர்கள் தாக்கியதாக வெளியான செய்திகளை நெதர்லாந்து அதிகாரிகள் ஊர்ஜிதம் செய்ய மறுத்து வருகிறார்கள்.