மலேசிய விமானத்தின் பயணிகள் ஒட்சிசன் இல்லாமல் பலியாகியிருக்கலாம் : புதுத் தகவல்!!

630

MH

மாயமான மலேசிய விமானத்தின் பயணிகள் ஒட்சிசன் இல்லாமல் பலியாகியிருக்கலாம் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் 8ம் திகதி மாயமான மலேசிய விமானம் எம்.எச். 370 குறித்த தகவல்கள் இன்றுவரை வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் அந்த விமானத்தின் விமானி வேண்டுமென்றே பிராண வாயு தொடர்பைத் துண்டித்திருக்கலாம் என்ற ஐயம் எழுந்துள்ளது.

நியூசிலாந்தின் கிவி ஏர்லைன்ஸ் நிறுவனரும், பைலட்டுமான இவான் வில்சன் என்பவரே இந்த புதிய நோக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில், கேபினில் பைலட் ஒட்சிசன் தொடர்பை துண்டித்திருக்கலாம். பயணிகள் தூங்கிக்கொண்டிருந்ததால் ஒட்சிசன் மாஸ்க்குகளை பயணிகள் பயன்படுத்த வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் தனது சக விமானி கேபினிலிருந்து வெளியேற்றிவிட்டு அகமது ஷா தனது ஒட்சிசன் மாஸ்க்கைப் பயன்படுத்தி ராடார் பார்வையிலிருந்து விமானத்தை மறைத்திருக்கலாம், இதுதான் அந்த விமானியின் ‘மாஸ்டர் பிளான்’ என்றும் அதன் பிறகு கட்டுப்பாட்டுடனும், நிபுணத்துவத்துடனும் அவர் கடலில் விமானத்தை இறக்கியிருக்கலாம். அதனால்தான் விமானத்தின் பாகங்கள் எதுவும் கூட கிடைக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.