காதலியின் இதயம் மற்றும் மூளையை சமைத்துச் சாப்பிட்ட காதலன்!!

276

heart

அமெரிக்காவில் நபர் ஒருவன் தனது காதலியின் இதயம் மற்றும் மூளையை சமைத்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள ஜெப்பர் ஜோன்வில்லி பகுதியை சேர்ந்த பெண் டாம்மி ஜோ பிளாண்டன் (46). இவரது முன்னாள் காதலன் ஜோசப் ஒபர்கென்சலே (33).

சம்பவத்தன்று தனது காதலன் வீட்டை அடித்துச் சேதப்படுத்துவதாக பிளாண்டனிடமிருந்து பொலிசாருக்கு அழைப்பு வந்துள்ளது. ஆனால் பிளாண்டனின் வீட்டிற்கு பொலிசார் செல்வதற்கு முன்னதாக காதலர் ஜோசப் தலைமறைவாகிவாகியதால், அவனை தீவிரமாய் தேடி வந்துள்ளனர்.

அப்போது பிளாண்டன் மீண்டும் பொலிசாருக்கு தொடர்பு கொண்டு, தனது காதலரால் தன் உயிருக்கு ஆபத்து என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த பொலிசார், ரத்த வெள்ளத்தில் இருந்த பிளாண்டனின் சடலத்தை குளியல் தொட்டியிலிருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் பிளாண்டனின் தலை நசுக்கபட்டதுடன், அவரது மூளை, இதயம் மற்றும் நுரையீரல் ஆகிய பகுதிகளை காணவில்லை என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிளாண்டனின் முன்னாள் காதலனான ஜோசப்பை கைது செய்த பொலிசார், அவன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பிளாண்டனின் வீட்டில் இருந்து ரத்த கரைபடிந்த இடுக்கி, சமையல் செய்யபட்ட பாத்திரம் மற்றும் மண்டை ஓடு எலும்பு ஆகியவற்றை கண்டு பிடித்த பொலிசார், இந்த உறுப்புகளை ஜோசப் சமைத்து சாப்பிட்டுள்ளான் என்பதை விசாரணையில் அறிந்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் ஆஜரான ஜோசப் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான்.