எபோலா நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு!!

284

Ebola

எபோலா என்ற கொடிய வைரஸ் நோய் மேற்கு ஆபிரிக்காவில் லைபீரியா, கினியா, சியாரா லோன் ஆகிய நாடுகளில் கடுமையாக தாக்கி உள்ளது. அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட 6 நாடுகளில் பரவலாக உள்ளது.

இந்த உயிர் கொல்லி நோயை குணப்படுத்த இதுவரை மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. எனவே நோயை கட்டுப்படுத்த பல நாடுகள் தாங்கள் கண்டு பிடித்த மருந்துகளை பயன்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்காவில் எபோலாவை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நோய் பாதிப்பு தெரிந்த 20 பேருக்கு கொடுத்து பரிசோதிக்கப்பட்டது.

அவர்களில் அதிக அளவு நோய் தாக்கி 39 டிகிரி செல்சியஸ் காய்ச்சல் இருந்த 2 நோயாளிகளுக்கு ஒரே நாளில் குணமாகி விட்டது. அதை தொடர்ந்து எபோலா மருந்து சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்தில் எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகரித்து எபோலா நோய் அதிகம் பாதித்த மக்களுக்கு வழங்கி பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.