சீனாவில் 40 ஆண்டுக்கு முந்தைய பன்றி இறைச்சி விற்பனை!!

270

China

சீனாவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள், ஹோ ட்டல்களில் வெளிநாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட இறைச்சிப் பொருட்கள் விற்பதாக தகவல் வந்தது. இதையடுத்து அதிகாரிகள் கடைகள் மற்றும் ஹோட்டல்களில் சோதனை நடத்தினார்கள். அப்போது 800 தொன் கடத்தல் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த இறைச்சிகள் அனைத்தும் பதம் செய்யப்பட்டு பக்கெட்டுகளில் அடைக்கப்பட்டதாகும், அவற்றை குளிர்சாதன பெட்டிகளில் வைத்து பாதுகாத்து விற்பனைக்காக அனுப்பி உள்ளனர்.

ஆனால் இந்த இறைச்சிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு பதம் செய்யப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. பன்றி இறைச்சி, கோழி இறைச்சி ஆகியவற்றை இவ்வாறு பதம் செய்து வைத்துள்ளனர். அவற்றை கடத்தல்காரர்கள் சீனாவுக்கு கொண்டு வந்து விற்பனை செய்துள்ளனர்.

இவை பெரும்பாலும் வியட்நாம் மற்றும் இந்தியாவில் இருந்து சீனாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அவற்றில் சில இறைச்சிகள் 40 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது தெரியவந்துள்ளது. 1970ம் ஆண்டளவில் பதம் செய்யப்பட்ட இறைச்சிகளை இங்கு கடத்தி வந்து விற்பனை செய்துள்ளனர்.

இதுதொடர்பாக சீன நிர்வாகம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பெரும்பாலும் அங்குள்ள ஹுனான் பகுதியில் கடத்தல் இறைச்சிகள் விற்கப்பட்டு வருகிறது.