பாடசாலை நண்பரை குற்றவாளிக் கூண்டில் சந்தித்த பெண் நீதிபதி!!

266

Lady

அமெரிக்காவில் மியாமா நகர நீதிமன்றத்தில் ஒரு கொள்ளை வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை பெண் நீதிபதி மின்டி கிளேசர் என்பவர் விசாரித்தார். அவர் முன்பு குற்றவாளியாக ஆர்தர் பூத் (49) என்பவர் நின்றுக்கொண்டிருந்தார். அவரை பார்த்த நீதிபதி கிளேசர் அதிர்ச்சி அடைந்தார்.

ஏனெனில் திருடனாக நிற்கும் குற்றவாளி அவரது பாடசாலை கால நெருங்கிய நண்பர் ஆவார். இவர்கள் இருவரும் மியாமி பகுதியில் உள்ள நயூடிலஸ் நடுநிலைப் பள்ளியில் ஒன்றாக படித்துள்ளனர்.

நீதிமன்றத்தில் இருவரும் நேருக்கு நேர் சந்தித்ததும் அடையாளம் கண்டு கொண்டனர். இதனால் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்த பூத், நீதிபதி மின்டி கிளேசரிடம் குற்றவாளி என்ற நிலையில் உங்களை இங்கு பார்த்ததில் மிகவும் வருத்தம் அடைகிறேன் என்றார்.

அதற்கு பதில் அளித்த நீதிபதி, “எப்போதும் உங்களை பற்றி நான் ஆச்சரியமடைவேன். எப்படி இதுபோன்று நடந்தது” என்றார்.
மேலும் அவர் கூறும்போது, பள்ளியில் படிக்கும்போது பூத் மிகவும் நல்லவராக இருந்தார். கால்பந்து வீரர். நானும் அவருடன் கால்பந்து விளையாடி இருக்கிறேன் என்றார்.