காரை தாயாக நினைக்கும் குட்டி காண்டாமிருகத்தின் சோகக் கதை!!

284

Animal

தென் ஆபிரிக்காவின் க்ரூகர் தேசிய பூங்காவில் உள்ள 2 மாத குட்டி காண்டாமிருகத்தின் பெயர் டோன்னி.

டோன்னியின் அம்மா வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்ட பிறகு காட்டில் தனியாக அலைந்து கொண்டிருந்த டோன்னியை (க்ரூகர் பூங்காவின் ரேஞ்சர் வைத்த பெயர்) வன விலங்கு ஆர்வலர்கள் க்ரூகர் தேசிய பூங்காவிற்கு கூட்டி வந்தனர்.

வந்த சில நாட்களில் இதய அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த டோன்னி தற்போது குணமாகியுள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் க்ரூகர் தேசிய பூங்காவில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த சாம்பல் நிறக் காரை தனது தாய் என்று நினைத்து டோன்னி சுற்றி சுற்றி வந்தது, அங்கிருந்த பார்வையாளர்களின் கண்களைக் குளமாக்கியது.

தாயை இழந்த மிருகங்கள் சில பொருட்கள், சில மனிதர்களை தங்கள் தாயாக நினைத்துக் கொள்வதன் மூலமாக தங்கள் இழப்பை ஈடு செய்து கொள்ளும் என்று இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இழப்பின் வலி எல்லா ஜீவராசிகளுக்கும் ஒன்றுதானே.