12 வயது மகனின் விரல் நுனி­களை வெட்டித் துண்­டித்த ஐ.எஸ். தீவி­ர­வா­திகள்!!

315

is terrorist

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் 12 வயது சிறுவன் ஒரு­வ­னது விரல் நுனி­களை, மதம் மாற மறுத்த அவ­னது தந்தை மற்றும் ஏனைய கிறிஸ்­த­வர்கள் முன்­பாக வெட்டித் துண்­டித்த சம்­பவம் சிரி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

இது தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் செவ்­வாய்க்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.அந்தப் பெயர் வெளி­யி­டப்­ப­டாத சிறுவனின் தந்தை சிரிய பிராந்­திய கிறிஸ்­தவ தொண்டு ஸ்தாபன குழு­வொன்றின் தலை­வ­ராவார் அவரும் ஏனை­ய­வர்­களும் மதம் மாறு­வ­தற்கு மறுத்­த­தை­ய­டுத்து, அவர் மதம் மாறத் தவ­றினால் அவ­ரது மகன் சித்­தி­ர­வதை செய்­யப்­ப­டுவான் என ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் அச்­சு­றுத்தல் விடுத்­துள்­ளனர்.

அதற்கும் அவர் அடி­ப­ணி­யா­ததால் சின­ம­டைந்த தீவி­ர­வா­திகள், அந்த சிறு­வனை அடித்து உதைத்து சித்­தி­ர­வதை செய்து அவ­னது விரல் நுனி­களை வெட்டித் துண்­டித்­துள்­ளனர்.அத்­துடன் அங்­கி­ருந்த ஏனைய கிறிஸ்­த­வர்கள் இரு­வ­ரையும் அடித்து உதைத்த தீவி­ர­வா­திகள், அவர்­க­ளையும் குறிப்­பிட்ட சிறு­வ­னையும் சிலு­வையில் அறைந்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்து சிறு­வனின் தந்தை உட்­பட அங்­கி­ருந்த 12 கிறிஸ்­த­வர்­க­ளுக்கும் தீவி­ர­வா­தி­களால் தலையைத் துண்­டித்து மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது.மர­ண­தண்­டனை நிறை­வேற்­றத்தின் போது அந்த 12 பேரில் ஒரு­வ­ரான பெண்­ணொ­ருவர், “இயே­சுவே’ என கோஷம் எழுப்­பி­ய­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. சிரிய அலெப்போ மாகா­ணத்­தி­லுள்ள கிரா­ம­மொன்­றி­லேயே அவர்­க­ளுக்கு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

அதே­ச­மயம் அதே தினத்தில் கிறிஸ்­தவ கிரா­ம­மொன்­றி­லி­ருந்து 29 வயது மற்றும் 33 வய­து­டைய இரு பெண்கள் உட்­பட 8 பேரை கடத்­திய தீவி­ர­வா­திகள், அவர்­க­ளையும் மதம் மாற நிர்ப்­பந்­தித்­துள்­ளனர்.

இந்­நி­லையில் அவர்­களும் மதம் மாற மறுக்­கவும் இந்தக் குழு­வினர் மத்­தி­யி­லி­ருந்த இரு பெண்­க­ளையும் பாலியல் வல்­லு­றவுக்குட்­ப­டுத்­திய தீவி­ர­வா­திகள், அவர்­க­ளுக்கும் எனைய 4 ஆண்­க­ளுக்கும் தலையைத் துண்­டித்து மர­ண­தண்­டனையை நிறை­வேற்­றி­யுள்­ளனர்.

மேற்­படி கிறிஸ்தவர்கள் அனை­வரும் தமது மதத்தின் மீது கொண்­டி­ருந்த நம்­பிக்­கைக்­கா­கவே கொல்­லப்­பட்­டுள்­ள­தாக சிரிய கிறிஸ்­த­வர்­க­ளுக்கு உதவும் முக­மாக செயற்­படும் தொண்டு ஸ்தாப­ன­மான பர்­னாபாஸ் நிதி­யத்தின் ஸ்தாபகர் பற்றிக் சூக்டியோ தெரிவித்தார்.