விசா கிடைக்காததால் உலக அழகி பட்டத்தை தவற விட்ட கனடிய பிரஜை!!

330

Anastasia-Lin-is-Miss-World-Canada-2015சீனாவில் நடைபெற உள்ள 2015ம் ஆண்டிற்கான உலக அழகி போட்டியில் பங்கேற்க விசா கிடைக்காததால் கனடா நாட்டு முன்னாள் உலக அழகி ஒருவருக்கு போட்டியில் பங்கேற்க முடியாத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. Anastasia Lin(25) என்ற இளம்பெண் சீனாவில் பிறந்து கனடாவில் குடியுரிமை பெற்று அந்நாட்டில் வசித்து வருகிறார்.

2015ம் ஆண்டு ’கனடா உலக அழகி’ போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால், சீனாவில் நடைபெறவுள்ள ‘உகல அழகி 2015’ போட்டியில் பங்கேற்பதை தனது வாழ்நாள் கனவாக கொண்டிருந்துள்ளார்.

ஆனால், அவரது கனவு பொய்த்து போக அவரே தற்போது காரணமாகியுள்ளார்.
Anastasia Lin கனடிய அழகி மட்டுமில்லாமல், ஒரு சிறந்த மனித உரிமை ஆர்வலராகவும் கனடாவில் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், 2015ம் ஆண்டு முழுவதும் சீனாவில் நிகழ்ந்த மனித உரிமை மீரல்களை அவர் கடுமையாக விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது.
இதன் எதிரொலியாக, சீனா நாட்டில் நடைபெற உள்ள ‘உலக அழகி 2015’ போட்டில்யில் பங்கேற்க அந்நாடு விசா வழங்க மறுத்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், போட்டி ஏற்பாட்டாளர்களை தொடர்புக்கொண்டு விளக்கம் கேட்டுள்ளார். ‘நவம்பர் 20(கடந்த வெள்ளிக்கிழமை) திகதிக்குள் சீனாவிற்கு வரவில்லை என்றால், போட்டியில் கலந்துக்கொள்ள முடியாமல் போய்விடும் என உறுதியாக கூறியுள்ளனர்.

ஆனால், இதுநாள் வரை அவரால் சீனாவிற்கு பயணம் ஆக முடியாமல் போயுள்ளதால், அவர் போட்டியில் பங்கேற்க முடியாது என்ற தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கனடிய அரசிடம் முறையிட்டபோது ‘சீனா நாடு விசா வழங்கும் விவகாரத்தில் கனடிய அரசு தலையிட முடியாது’ என மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.