வவுனியா நவநீதன் சர்வதேச மரதன் போட்டியில் 2ம் இடத்தைப்பெற்று வவுனியா மண்ணுக்கு பெருமை!!

1156

 
வவுனியா கூமாங்குளத்தை சொந்த இடமாகக்கொண்ட கே.நவநீதன் சர்வதேச ரீதியில் நேற்று (20.02.2016) தாய்லாந்தில் நடைபெற்ற 100 கிலோமீற்றர் தூர மரதன் ஓட்டப்போட்டியில் 2ம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

மிகுந்த சிரமத்தின் மத்தியில் தனது சொந்த முயற்சியில் தாய்லாந்து சென்ற இவர் இரண்டாம் இடத்தைப் பெற்று வவுனியா மண்ணுக்கு பெருமை சேர்த்தது மட்டுமல்லாமல், வவுனியாவில் சாதிக்கத் துடிக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் முன்மாதிரியாகவும் மாறியுள்ளார்.

வடமாகாண சபை உட்பட எந்த அதிகாரிகளும் சர்வதேச மரதன் போட்டிக்கு தெரிவாகியுள்ள நவநீதனுக்கு உதவி செய்வதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச மரதன் போட்டியில் பதக்கம் பெற்று வவுனியா மண்ணுக்கு பெருமை சேர்த்த நவநீதனை வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துவதில் பெருமையடைகின்றோம்.

தொடர்புபட்ட செய்தி : சர்வதேச ரீதியில் மரதன் ஓட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட வவுனியா வீரர் வடமாகாண சபையால் புறக்கணிப்பு!!

12717460_10207637678813223_2651946445709742632_n12742802_10207637681333286_7526919423997371213_n  12705667_10207637677973202_3804970577954420083_n12734217_10207637679533241_9045502158890765773_n  12742814_10207637680333261_5494982651543852810_n