இந்தி வரைக்கும் பரவிய அமலாபாலின் புகழ்..!

1125

amalaபாலிவுட்டில் புகழ் பரவியதால் அளவிட முடியாத மகிழ்ச்சியில் தத்தளித்துக் கொண்டிருக்கிறாராம் நடிகை அமலாபால்.

தமிழில் மைனா படத்தில் அடைந்த வெற்றியை தொடர்ந்து விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளார் அமலாபால்.

இவர் விஜய்யுடன் இணைந்து நடித்த தலைவா படமானது தமிழகத்தில் பல சிக்கல்களை சந்தித்து தற்போது வெளியாவற்கு தயாராகிவிட்டது.

மேலும் அமலாபால் தெலுங்கில் நடித்த பெஜவாடு ரவுடிலு என்ற படம் ஆந்திராவில் படு ஹிட்டானது.

இதனை அப்படியே இந்தியில் டப் செய்து வெளியிட்டார்களாம். போன இடத்திலும் ரசிகர்களின் ஆதரவை அள்ளியுள்ளது பெஜவாடு.

இந்தி வரைக்கும் நம்ம புகழ் பரவிடுச்சே என்பதால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறாராம் அமலாபால்.