இந்தியத் தலைவர்களுடன் ரணில் சந்திப்பு..!

576

ranilஇந்தியா சென்றுள்ள எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜிக்கும் இடையில் நேற்று புதுடில்லியில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

சுமார் ஒரு மணித்தியாலம் நீடித்த இச்சந்திப்பின் போது இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வலய தொடர்பு மற்றும் வலய பொருளாதாரம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அகில இந்திய காங்கிரஸ் குழுவின் செயலாளர் திக் விஜயசிங்கையும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

அத்துடன், பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர் யஸ்வந்த் சிங்ஹாவையும் ரணில் சந்தித்து பேசியுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தை எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று சந்திக்கவுள்ளார்.