மெட்ராஸ் கஃபே படத்திற்கு தடை..!

553

madrasஈழதமிழர் போராட்டங்களை இழிவாக சித்தரிக்கும் மெட்ராஸ் கஃபே என்ற படம் இம்மாதம் இறுதியில் வெளியாக இருந்தது. அப்படத்தை ஹிந்தியில் பார்த்த சில தமிழர்கள் மூலம் தகவல் அறிந்த தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் அப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து தமிழ் தன்னார்வ மைப்பின் சார்ப்பில் மதுரை நீதிமன்றத்தில் தொடரபட்ட வழக்கிற்கு இன்று தீர்ப்பளித்த நீதிபதி, மக்களின் உணர்வுகளுடன் விளையாடி உணர்ச்சிகளை தூண்டி கலவரத்துக்கு வழி வகுக்கும் படியான படங்கள் வெளியாகாமல் இருப்பதே நல்லது என அப்படத்திற்கு தடை விதித்தார்.