
பிரான்ஸ் நாட்டில் பெண் ஒருவர் 44 வருடங்களுக்கு முன்பு பிரிந்துபோன தன்னுடைய சகோதரிகளை பேஸ்புக்கின் உதவியால் கண்டுபிடித்துள்ளார்.
பிரான்சில் உள்ள துவைய்(Douai) என்னும் இடத்தில் வசிப்பவர் முரியேல் வண்டர்வேக்கன்(Muriel Vanderveken) (66). இவருக்கு லிலியான்(Liliane), டோர்த்தி( Dorothée) என்ற இரு சகோதரிகள் உள்ளனர்.
சிறு வயதில் தன்னுடைய குடும்பத்தை விட்டு கான்வென்ட் பள்ளிக்கு சென்றுவிட்ட இவரால் பின்பு தன்னுடைய குடும்பத்தினரை சந்திக்க முடியவில்லை. பல ஆண்டுகளுக்கு பின்பு தன்னுடைய குடும்பத்தினரை தேடும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அவை தோல்வியிலேயே முடிந்துள்ளன.
இந்நிலையில் 66 வயதான வண்டர் வேக்கன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். எனவே தான் இறப்பதற்குள் தன்னுடைய சகோதரிகளை சந்தித்து விட வேண்டும் என்று நினைத்த இவர் பேஸ்புக்கின் மூலம் தனது சகோதரிகளை தேட ஆரம்பித்துள்ளார்.
அப்போது இவருடைய சகோதரிகளில் ஒருவரான டோர்த்தி என்பவரை கண்டுபிடித்துள்ளார். இது குறித்து முரிலி கூறுகையில், நான் பேஸ்புக்கில் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளேன். ஆனால் அவற்றில் நம்மைப் பற்றி விடயங்களை கொடுப்பதன் மூலம் என்னுடைய தங்கையை கண்டுபிடிக்க முடிந்தது.
மேலும், என்னுடைய மற்றொரு தங்கை மற்றும் அண்ணனை தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அவர்கள் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தது எனக்கு வருத்தமளிக்கிறது என்று கூறியுள்ளார்.





