
இலங்கை பெண் ஒருவரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் அமெரிக்க பிரஜை ஒருவர் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க கிறிஸ்த்தவ பிரஜையான இவர் சவுதியில் இஸ்லாமுக்கு மதமாற்றம் செய்து கொண்டு இலங்கை பெண்ணை திருமணம் முடித்து வாழ்ந்து வந்துள்ளார்.
சவுதியில் வாழ்ந்து வந்த இந்த ஜோடிக்கு இடையில் பிரச்சினை ஏற்பட்டு தனது மனைவி காணாமல் போனதாக அமெரிக்கர் கூறி வந்துள்ளார்.
ஆனால் குழாய் ஒன்றில் திணிக்கப்பட்டிருந்த நிலையில் சீன பிரஜைகளால் இலங்கை பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.
இந்நிலையில் தனது மனைவியை கொலை செய்து எரிவாயு மற்றும் பெட்ரோலிய ஆய்வு பயன்படுத்தப்படும் ஒரு குழாய் சடலத்தை திணித்து வைத்ததாக அமெரிக்கர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த அமெரிக்கர் பணிபுரியும் எரிவாயு, பெற்றோலிய குழாய் நிறுவனத்தில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு சவுதி நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கு விசாரணையின் போது சந்தேகநபர் மாறுபட்ட கருத்துக்களை கூறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





