வவுனியாவின் பிரபல பாடசாலைகளில் ஒன்றான புதுக்குளம் மகாவித்தியாலயம் நூற்றாண்டு விழா நாளை (24.07.2016) ஞாயிற்றுகிழமை மற்றும் நாளை மறுதினம் (25.07.2016) திங்கட்கிழமை ஆகிய இருதினங்களிலும் பாடசாலை அதிபர் த.சுபாஸ்கரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இன் நிகழ்வுகளில் முதல்நாள் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவும் இரண்டாம்நாள் இந்திய துணைத்தூதர் நடராஜன் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.
மேற்படி நிகழ்வுகளை வவுனியா நெற் இணையம் நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா நெற் நேரடி ஒளிபரப்பு என்ற பக்கத்தை சொடுக்குவதன்மூலம் புலம்பெயர் தேசங்களில் உள்ள பாடசாலையின் உறவுகள் பார்வையிடமுடியும் என்பதை தெரிவித்து க்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பை பார்வையிட இங்கு கிளிக் செய்க









