குளிரூட்டி இயந்திரத்தில் வைத்து தம்மை கொலை செய்ய முயற்சித்ததாக இலங்கை பெண் ஒருவர் சுமத்திய குற்றச்சாட்டை சவூதியில் உள்ள இலங்கை தூதரகம் மறுத்துள்ளது.
நிலங்கெதர தயாரத்ன என்ற இந்த பெண் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சவூதிக்கு தொழிலுக்காக சென்றுள்ளார்.
இந்தநிலையில் தமது எஜமானர் தம்மை கொலை செய்யும் நோக்கில் குளிரூட்டியில் வைத்து பூட்டியதாக அவர் இலங்கையில் உள்ள தமது கணவருக்கு அறிவித்திருந்தார்.
எனினும் இது தொடர்பில் சவூதியில் உள்ள இலங்கை தூதரகம் மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த பெண்ணின் உடம்பில் சில எரிகாயங்கள் உள்ள போதும் அவர் நலமாக உள்ளார் என்று தெரியவந்துள்ளது.





