மத்திய பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற அந்த மாநில முதல்வரை பொலிசார் தூக்கிச் சென்றது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வட மாநிலங்களான பீகார், உ.பி, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள முக்கிய நதியான கங்கை அபாயக்கட்டத்தை தாண்டி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மத்திய பிரதேசத்தில் ரெவா, சாட்னா மற்றும் பன்னா ஆகிய மாவட்டத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடத்தை அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பார்வையிட்டார். பன்னா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தரை வழியாகச் சென்று பார்வையிட்டார்.
ஒரு பகுதியில் அவர்கள் பார்வையிட சென்றபோது அவர்கள் சென்ற பாதையில் திடீரென வெள்ளம் ஒரு அடி அளவிற்குச் சென்றது. இதனால் முதல்வருக்கு பாதுகாவலுக்கு சென்ற பொலிசார் அவரை தூக்கிச் சென்றனர். இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சவுகான் எதைப் பற்றி கவலைப்படாமல் தரை வழியாக அவரது பயணத்தை மேற்கொண்டார். பொலிசார் முதல்வரை தூக்கிச் சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.






